உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 01, 2010

முன் வைப்பு தொகை இன்றி மாணவர்கள் பாங்கி கணக்கு தொடங்கலாம்: கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர்:
                     தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிலையங் ளில் பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில் பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை வழங்கும் விவரம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

                     இக்கல்வி உதவித்தொகை பெறும் மாணவ - மாணவிகளுக்கு முன்வைப்பு தொகை ஏதும் இன்றி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க மாநில அளவிலான வங்கிக் குழுவால் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இக்கல்வி உதவித்தொகை பெற தகுதிவாய்ந்த மாணவ - மாணவிகளின் பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகள் பயிலும் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை அணுகி முன்வைப்புத்தொகை ஏதுமின்றி வங்கி கணக்கினை தொடங்கி பயனடையலாம்.

                     அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கல்வி உதவித்தொகை பெற பரிந்துரை செய்ய உள்ள மாணவ- மாணவிகளுக்கு அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகி முன்வைப்பு ஏதுமின்றி வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை தொடரவும், வங்கி கணக்கு விவரங்களை கடலூர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப் படுகிறார்கள்.

                    மேலும் வங்கி கணக்கு தொடங்க உள்ள மாணவ- மாணவிகளுக்கு அடையாள அட்டைகளும் வழங்க வேண்டியது. இந்த தகவலை கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior