கடலூர்:
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தீயணைப்புத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு நடவடிக்கைள் குறித்த, ஆலோசனைக் கூட்டம் கடலூர் கோட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம், திருச்சி, நாகை, திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்புத் துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.÷தீபாவளியை முன்னிட்டு பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கச் செய்தல், தீவிபத்து நேராமல் பாதுகாத்தல், முறையான அனுமதியின்றி பட்டாசுக் கடைகளை நடத்தாமல் பார்த்துக் கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் தகுந்த அறிவுரைகளை, தீயணைப்புத் துறை திருச்சி மண்டல துணை இயக்குநர் ராமச்சந்திரன் வழங்கினார்.
கடலூர் கோட்ட தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில் ராமச்சந்திரன் மரக்கன்றுகளை நட்டார். கடலூர் கோட்ட தீயணைப்பு அலுவலர் குமாரசாமி, உதவிக் கோட்ட அலுவலர் சரவணன், நிலைய தீயணைப்பு அலுவலர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக