உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 19, 2010

கீழச்சாவடி - ராதாவிளாகம் இடையே ரூ.67.8 லட்சத்தில் சாலை பணி ஆயத்தம்

கிள்ளை : 

                 சிதம்பரம் அருகே கீழச்சாவடியில் இருந்து ராதாவிளாகம் வரை 3.2 கி.மீ., தூரத்திற்கு 67.8 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்க ஆயத்தப்பணிகள் துவங்கியது. சிதம்பரத்தில் இருந்து நக்கரவந்தன்குடி, கோவில் பள்ளம், உத்தமசோழமங்கலம், ராதாவிளாகம் மற் றும் கீழச்சாவடி வழியாக கிள்ளை சாலை உள்ளது.  ராதாவிளாகம் சுற்றுப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிள்ளை அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் சுற்றுப் பகுதி பொதுமக்கள் ஒன்றியத்தின் தலைமை இடமான பரங்கிப் பேட்டைக்கு செல்ல மிகவும் பாதிக் கப்பட்டனர்.

              அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 20  ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரத்தில் இருந்து கிள்ளை வரை இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது.சாலையை பராமரிக்காமல் விட்டதால் குண்டும், குழியுமானது.  இதனால் கீழச்சாவடியில் இருந்து ராதாவிளாகம் வரை மோட்டார் பைக்கில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் பாதுகாப்பு நலன் கருதி கடந்த 15 ஆண்டுகளாக சிதம்பரத்தில் இருந்து வரும் அரசு பஸ் ராதாவிளாகத்துடன் திருப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிள்ளை அரசு பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
  
                  பரங்கிப்பேட்டை ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர். தற்போது கீழச்சாவடியில் இருந்து ராதாவிளாகம் வரை 3.2 கி.மீ., தூரம் 67.8 லட்சம் ரூபாய் செலவில் (டி.ஆர்.டி.ஏ.,) நபார்டு திட்டத்தின் மூலம் தார் சாலை அமைக்க ஜல்லி கொட்டும் பணிகள் துவங்கியது. இன்னும் இரண்டு மாதத்தில் தார்சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior