கடலூர் :
கரும்பு சாகுபடியில் இயந்திரங்கள் பயன்படுத்துதல் தொடர்பாக விவசாய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து கடலூர் வேளாண்மை பொறியியல் துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கிராமப்புற விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு 2010-11ம் ஆண்டிற்கான கரும்பு சாகுபடி செய்வதில் வேளாண் கருவிகள் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. அதில் கரும்பு விவசாயத்திற்கு பயன்படும் கருவிகளான கரும்பின் கரணை பார் அமைத்து நடவு செய்யும் கருவி, கரும்பு தோகை துகளாக்கும் கருவி, அறுவடை இயந்திரம், பட்டை சீவி பாரில் உழவு செய்யும் கருவி, களை எடுக்கும் கருவி போன்ற இயந்திரங்களின் தொடர்பாக பயிற்சிகள், நீர் நிர்வாகம், சொட்டு நீர்பாசனம் போன்றவற்றிற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி 20 பேர்களுக்கு மட்டும் கடலூர் சின்னகங்கணாங்குப்பம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 29ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற விருப்பமுள்ள 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இம்மாதம் 26ம் தேதிக்குள் கடலூர் உதவி செயற்பொறியாளரை அணுகி பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறார் கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக