உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 31, 2010

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் 26 ஆயிரம் பேர் தேர்வு

கடலூர்:

               கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பயனாளிகளுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கும் விழா குமராட்சியில் நடைபெற்றது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி 9444 பேருக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார். 
 
அப்போது கலெக்டர் சீத்தாராமன் பேசியது:-

             கலைஞர் வீடு வழங்கும் திட்டம் முதன் முதலில் துணை முதல்வர் அடிக்கல் நாட்டியதும், முதல் பயனாளிக்கு வீட்டு சாவி ஒப்படைத்தது நமது மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். இந்த பணிகள் இந்த பகுதிகளில் பெய்த மழை பெருவெள்ளம் காரணமாக சுணக்கம் ஏற்பட்டது.

              கடலூர் மாவட்டத்தில் 1,27,888 பேருக்கு நிபந்தனையின்றியும், 39239 பேருக்கு நிபந்தனையுடன் கூடியும் ஆக மொத்தம் 1,64,327 பேருக்கு வரும் 6 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டுள்னர். இதில் நடப்பாண்டில் 26119 வீடுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 195.89 லட்சத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.  குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிக்கு 5759 பேருக்கு நிபந்தனையின்றி யும், 3685 பேருக்கு நிபந்தனை பேரிலும் ஆக மொத்தம் 9444 பேருக்கு தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் 1560 வீடுகளுக்கு ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.17 கோடியே 70 லட்சத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரம் கட்டுமான பொருட்களன் விலை மற்றும் கட்டுப்பாடு நீங்கி பணிகள் விரைந்து நடைபெறும்.

                   மேலும் வெள்ளம் பாதித்த காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு முழுவதும் பாதிக்கப்பட்ட 83 குடிசை வீட்டிற்கு ரூ.5000 வீதமும், பகுதியாக சேதம் அடைந்த 170 குடிசைக்கு ரூ.2500 வீதமும், 5151 வீடுகளுக்கு ரூ.1500 வீதமும், சிதம்பரம் பகுதியில் முழுவதும் பாதித்த 9 குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதியாக சேதமடைந்த 79 வீட்டிற்கு ரூ.2500ம், 6172 வீடுகளுக்கு ரூ.1500ம் வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.இதேபோல் பயிர் கணக்கெடுப்பு முடிந்து பணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வரவு வைக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பயிர் காப்பீடு குறைபாடுகள் வரும் காலங்களில் நிவர்த்தி செய்யப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

                காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ரவிக்குமார், குமராட்சி ஒன்றியக்குழு தலைவர் மாமல்லன், மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, திட்ட அலுவலர் கவுன்சிலர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, திட்ட அலுவலர் வெங்கடாசலம், செயற்பொறியாளர் சந்திர நாராயணன், ஒன்றிய கவுன்சிலர்கள் பரந்தாமன், நடராஜன், சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior