உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 31, 2010

நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து துவங்கியது

நெல்லிக்குப்பம்:

                  நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் முதன் முதலாக சரக்கு போக்குவரத்து துவங்கியது. விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது கடலூர் முதுநகரில் மட்டும் சரக்குகள் ஏற்றி இறக்க தனிப்பாதை வசதி இருந்தது. நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து ஆண்டு தோறும் பல ஆயிரம் டன் சர்க்கரையை வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப லாரிகள் மூலம் கடலூர் முதுநகர் எடுத்து சென்று அங்கிருந்து ரயில்கள் மூலம் அனுப்பி வந்தனர். அதேப்போன்று சவுக்கு கட்டைகளும் அனுப்பப்பட்டன.

               விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையாக மாற்ற பணி துவங்கிய போது நெல்லிக்குப்பத்தில் சரக்குகள் ஏற்ற தனிப்பாதை அமைக்க வேண்டுமென சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் சரக்குகள் ஏற்ற தனி பாதையும், வாகனங்கள் செல்ல ரயில் பாதையையொட்டி சாலை வசதியும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முதன் முதலாக நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் இருந்து 42 சரக்கு ரயில் பெட்டிகளில் 1,500 டன் சவுக்கு மர கட்டைகள் ஒடிசா மாநிலம் சிங்கபுரம் ரோடு ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

            நெல்லிக்குப்பம் சுற்று வட்டாரத்தில் வெட்டப்படும் சவுக்கு மரங்களை இனி இங்கிருந்தே ரயில்களில் அனுப்ப முடியும் என்பதால் வியாபாரிகளும், சர்க்கரை மூட்டைகளை குறைந்த செலவில் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியும் என்பதால் சர்க்கரை ஆலை நிர்வாகமும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமின்றி இங்கிருந்து சரக்குகள் ஏற்றப் படுவதால் நெல்லிக்குப்பம் சுற்றுப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior