உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 31, 2010

கடலூர் மாவட்டத்தில் கட்டடத்தில் இயங்கும் நூலகங்கள்


பெண்ணாடத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அரசு நூலகம்
கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு நூலகங்கள் வாடகைக் கட்டடத்திலேயே இயங்கி வருகின்றன. ஆனால் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களில் நூலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் திறக்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் மூடியே கிடக்கின்றன.

             வளர்க்கும் இடங்களாக கருதப்படும் நூலகம் இன்று அவசியத் தேவையான ஒன்று. நூலகங்களை மாணவர்கள் மட்டுமின்றி, பெரியோர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்துகின்றனர். இன்று தொலைக்காட்சி ஆக்கிரமித்திருந்தாலும் நூலகத்துக்கான மவுசு இன்னும் குறையவில்லை. ஒவ்வொரு நூலகத்திலும் வாசகர் வட்டம் இருக்கத்தான் செய்கிறது. நூலகத்துக்குச் செல்லும் அங்கு நிலவும் அமைதியான சூழ்நிலை படிக்காத ஒருவரையும் புத்தகங்களை புரட்டச் செய்யும். அத்தகைய பெருமை நூலகங்களுக்கு உண்டு.

               மாவட்டத்தில் அரசின் சார்பில் 18 நூலங்கள் இயங்குகின்றன. இவற்றில் மூன்றில் 2 பங்கு நூலகங்கள் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்குகின்றன.அவ்வாறு வாடகைக் கட்டடத்தில் இயங்கும் நூலகங்கள் போதிய பராமரிப்பின்றியும், மழைகாலத்தில் ஒழுகிக் கொண்டும், வருகிற வாசகர்கள் அமர்ந்தபடி படிக்க முடியாத சூழலில் இயங்குகின்றன.சில நூலகங்களில் புத்தகங்கள் அடுக்கி வைக்கக் கூட போதிய அலமாரிகள் இல்லாமல் அவை சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

                ஒரு சில நூலகர்கள் ஆங்காங்கே நூலகப் புரவலர்களை உருவாக்கி, புரவலர்களின் உதவியுடன், நூலகத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி வாசகர்கள் குறையாத வண்ணம் செயல்படுகின்றனர்.ஏழை எளியவரும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஓய்வுபெற்றவர்களும்தான் இன்று அதிகஅளவில் நூலகங்களை பயன்படுத்துகின்றனர். இன்றைய சூழலில் விஞ்ஞான வளர்ச்சி என்பது கைக்கு எட்டாத தூரத்துக்கு வளர்ந்து விட்டபோதிலும், அரசு நூலக வளர்ச்சியில் போதிய பங்காற்றவில்லை என்பது கண்கூட தெரிகிறது.

          நூற்றாண்டு பழமைவாய்ந்த கன்னிமாரா நூலகத்தை புதுப்பித்து, அவற்றின் பெருமையை எடுத்துக்கூறும் அரசு, மாநிலம் முழுவதும் அரசுத்துறையால் நடத்தப்படுகிற நூலகத்தில் போதிய கவனம் செலுத்தாது ஏன் என்பது தெரியவில்லை.காலத்தால் அழியாத பல வரலாற்று உண்மைகள் உள்ளடக்கி, அவற்றை காலங்காலமாக போற்றிப் பாதுகாக்கப்படுவது இந்த நூலங்களில்தான்.அத்தகைய நூலகங்களுக்கு சொந்தக் கட்டடம் அவசியம் என்பதை ஏன் அரசு இன்னும் உணரவில்லை. 

               அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமம்தோறும் | 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டடங்கள் மட்டும் கட்டப்பட்டுள்ளன.இதன் மூலம் அப்பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலரும், ஒப்பந்ததாரரும் மட்டும் பயன்பெற்றுள்ளனர். நூலகக் கட்டடம் எதற்காக கட்டப்பட்டதோ அதற்கான நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகள் இதுபோன்று வெறும் கட்டடங்களுக்கு செல்லாமல், தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்குகிற நூலகங்களுக்கு பயன்படுத்தியாவது, நூலகங்களுக்கென சொந்தக் கட்டடத்தை ஏற்படுத்த, அரசு முயற்சிக்குமா?

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior