உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 10, 2010

கடலூர் மாவட்டத்தில் 6 1/2 லட்சம் பேருக்கு இலவச பொங்கல் பொருட்கள்: ஜனவரி 1-ந்தேதி முதல் கிடைக்கும்

கடலூர்:
  
கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:-

             தைதிங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாட அறிவித்துள்ள தமிழக அரசு இந்த தமிழ் புத்தாண்டுக்கு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கிட உத்தரவிட்டுள்ளது.  
 
                      அதன்படி இந்த திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 189 குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் விதத்தில் பச்சரிசி 1/2 கிலோ, வெல்லம் 1/2 கிலோ, பாசிப்பயிறு 100 கிராம், மற்றும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் 20 கிராம், போன்ற நான்கு பொருட்கள் அடங்கிய தனி பைகளை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி(சனிக்கிழமை) முதல் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரையில் அந்தந்த நியாயவிலை கடைகளில் ஒவ்வொரு பகுதி வார்டு வாரியாக தனித்தனியாக நாள் ஒதுக்கப்பட்டு இந்த இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

               மேலும் எந்த நாளில் எந்தபகுதி அல்லது வார்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பு நியாயவிலை கடைகளில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. இதில் அரிசி பெறும் குடும்ப அட்டைகள் சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்ப அட்டை என அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் என ஒருவர் கூட விடு படாமல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

                 எனவே குடும்ப அட்டை தாரர்கள் கூட்டம், கூட்டமாக சூழ்ந்து நெரிசலில் சிக்காமல் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட தேதியில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று தமிழக அரசின் இலவச பொங்கல் பொருள் பைகளை பெற்றுக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior