உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 27, 2011

பண்ருட்டி அருகே புதுமையான திருமணம்: 3 அடி உயர மணமகனுக்கு 2 1/2 அடி உயர மணமகள்

  பண்ருட்டியில் புதுமையான திருமணம்:

 

 3 அடி உயர மணமகனுக்கு 2 1/2 அடி உயர மணமகள்

 
பண்ருட்டி:
 
             பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ஞானஜோதி (வயது 28). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் 3 அடி உயரமே இருந்தார். இவருக்கு இவரது பெற்றோர் பல இடங்களில் பெண் பார்த்தார்கள். ஆனால் உடனடியாக பெண் கிடைக்கவில்லை.

            பண்ருட்டி வீரசிங்ககுப்பம் அருகே உள்ள புலவன் குப்பத்தை சேர்ந்த சுப்புராமன் என்பவரின் மகள் சங்கீதா (27) 10-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இருவரும் 2 1/2 அடி உயரமே இருந்தார். இதை அறிந்து ஞானஜோதியின் பெற்றோர் இளையபெருமாள், சகுந்தலா ஆகியோர் அங்கு சென்று சங்கீதாவை பெண் கேட்டனர்.

            அவர்களும் சங்கீதாவை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தனர். பின்னர் சங்கீதாவை ஞானஜோதி சந்தித்து பேசினார். இருவருக்கும் பிடித்திருந்தது. இதையொட்டி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.   ஞானஜோதி-சங்கீதா திருமணம் காடாம்புலியூர் கதிர்வேல்படையாச்சியார் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

              ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மணமகன் பட்டு வேட்டியும், பட்டு சட்டையும் அணிந்திருந்தார். மணமகள் கூரைப்புடவை கட்டியிருந்தார். புரோகிதர்கள் மந்திரம் ஓத மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். மணமகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் நடந்தது குறித்து மணமகன் ஞானஜோதி கூறியது:-

                   2 வருடமாக மனமகள் தேடினேன். மணமகள் கிடைக்கவில்லை. எனவே எனக்கு திருமணம் நடக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு சங்கீதா மணமகளாக கிடைத்திருக்கிறார். அவரை திருமணம் செய்ததால் நான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மணமகள் சங்கீதா கூறியது:

            எனக்கு எப்படியும் திருமணம் நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அதன்படி திருமணம் நடைபெற்றுள்ளது. நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior