உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 03, 2011

வீராணம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து 45.5 அடியாக நீடிப்பு

சிதம்பரம்:

              கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம்சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகாக்கள் பாசன வசதி பெறுகின்றன. அதோடு சென்னை நகரின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. கடந்த மாதம் பெய்த கனமழையால் வீராணம் ஏரிக்கு வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் வரத்து இருந்தது.

             இதனால் ஏரிக்கு வெள்ளஅபாயம் ஏற்பட்டதால் வருகின்ற தண்ணீர் அனைத்தும் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. தற்போது மழை வெள்ளம் வடிந்து வருகிறது. ஆனாலும் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து 45.5 அடியாக உள்ளது.  ஏரியின் மொத்த கொள்ளளவு 47.5 அடியாகும். கடந்த 26-ந் தேதி முதல் 45.5 அடியாக இருக்கும் வீராணம் ஏரிக்கு இன்று 300 கனஅடிநீர் வருகிறது.மதகுகள் வழியாக 200 கனஅடி நீரும், சென்னை மாநகர குடிநீருக்கு 74 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior