உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 03, 2011

தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.658 கோடியில் அறுவை சிகிச்சை அமைச்சர் பன்னீர்செல்வம்

சிதம்பரம்:

            கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பேரூராட்சியில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 63 கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி அட்டைகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். 

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 15,118 பேருக்கு தகுதி அட்டைகள் வழங்கி பேசியது:-  

             கடலூர் மாவட்டத்தில் 1,66,327 பேருக்கு தகுதி அட்டைகள் வழங்கப்பட்டு, வரும் 5 ஆண்டுகளில் காங்கிரீட் வீடுகளாக கட்டி வழங்கப்படும். இந்த ஆண்டு 26,199 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது.  கீரப்பாளையம் ஒன்றியத்தில் மட்டும் 6,419 பேருக்கு ரூ.3.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.   சிதம்பரம் தொகுதியில் 46,614 பேருக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதைபோல் 10,710 பேருக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

              கீரப்பாளையம் ஒன்றியத் தில் 394 பேருக்கு ரூ.79.38 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2,51,797 பேருக்கு ரூ.658.18 கோடியில் பல்வேறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 22,134 பேருக்கு இருதய அறுவை சிகிச்சையும், 51,854 பேருக்கு எலும்புமுறிவு சிகிச்சையும், 28,963 பேருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

             மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கி பேசினார். கீரப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், சேத்தியாதோப்பு பேரூராட்சி தலைவர் பட்டு கணேசன், வேளாண் விற்பனை குழு தலைவர் பூபாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) வெங்கடாசலம் வரவேற்றார். செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) சரவணகுமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior