காட்டுமன்னார்கோவில்:
            காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் புதிய  வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.வரும் மே மாதம்  சட்சபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்காளர்  அடையாள அட்டைக்காக போட்டோ எடுக்கும் பணி நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து  தற்போது புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடந்து  வருகிறது. காட்டுமன்னார்கோவில் தாலுகாவிற்கு முதல் கட்டமாக வந்துள்ள 3  ஆயிரத்து 819 வாக்காளர் அடையாள அட்டைகள் உரியவர்களுக்கு அந்தந்த பகுதி  வி.ஏ.ஓ.,க்கள் மூலம் வழங்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக