உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, ஜனவரி 07, 2011

கடலூர் மாவட்டத்தில் 60 கிராமங்களில் கலவரம் ஏற்படும் அபாயம் : வி.சிறுத்தைகள் மனு

கடலூர்:
  
கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் திருமாறன் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்து உள்ள மனுவில் கூறி இருப்பது:-

            கடலூர் மாவட்ட குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து பல வருடங்களாக பண்டிகை காலங்களில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு தொடர்ச்சியாக கலவரங்கள், ஜாதி மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. அத்தகைய நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் பண்டிகை. திருவிழா நிகழ்ச்சிகள் அமைதியாக முறையில் அமைய வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

           தமிழர்களின் முக்கிய பண்டிகையும், தமிழர் திருநாளாக கொண்டாடப்பட்டு வரும் புத்தாண்டு தினமாக தைப்பொங்கல், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம் மற்றும் காணும் பொங்கல் ஆகிய விழா நாட்கள் கொண்டாடப்பட இருக்கின்றது.   மேற்கண்ட நாட்களில் கடலூர் மாவட்டத்தில் 60 கிராமங்களில் கலவரம், ஜாதி மோதல்கள் ஏற்படும் நிலை உள்ளது. 
 
                 அதாவது விருத்தாசலம் ஒன்றியம் விளாங்காட்டூர், படுகளாநத்தம், தொரவள்ளூர், கோ.மங்கலம், ராஜேந்திரபட்டினம், இருளக்குறிச்சி, பழையபட்டினம், கார்மாங்குடி, தர்மநல்லூர், கார்கூடல், கோ.ஆதனூர், நல்லூர், கல்லூர், ( ஆவட்டி குறுக்குசாலை) புவனகிரி ஒன்றியம் வத்தராயன் தெத்து, முகந்தெரியான் குப்பம், வடக்குதிட்டை, சி.முட்லூர், மேலமூங்கிலடி, மஞ்சக்கொல்லை உள்ளிட்ட 60 கிராமங்களில் இந்த நிலை ஏற்படும்.

                எனவே தாங்கள் இந்த முறை மிகுந்த கவனத்துடன் தக்க நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பொங்கல் திருவிழா மற்றும் அதனை தொடர்ந்து வருகின்ற விழா நாட்கள் அனைத்தும் எந்த வித பிரச்சினையும் இன்றி சுமூகமாகவும், அமைதியாகவும், சமூக நல்லிணக்கத்துடனும் கொண்டாடப்படுவதை உறுதிபடுத்த வேண்டுகிறேன். 
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறி உள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior