கடலூர்
சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டதில் ஏராளமான பணம் சிக்கியது.
அதேபோல் நேற்று மாலை கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தொகுதி தேர்தல் உதவி அதிகாரி அசோகன், அலுவலர்கள் பழனி, சிவா மற்றும் போலீசார் வாகனங்களை சோதனையிட்டனர். இதில், திண்டிவனத்தில் உள்ள டிராவல்ஸ் உரிமையாளர் தனவேந்தன் (வயது 40), டிரைவர் செங்குட்டுவன் (28) ஆகியோர் சேர்ந்து வந்த காரில் ரூ.2 லட்சம் சிக்கியது.
இதுபற்றி அதிகாரிகள் விசாரணை செய்தபோது, கடலூரில் புதிய கார் வாங்குவதற்காக புதுவையில் உள்ள ஒரு நண்பரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கி வந்ததாக 2 பேரும் தெரிவித்தனர். அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக