கடலூர் :
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் குடும்பத்திற்கு, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
மனு தாக்கலின் போது, பன்னீர்செல்வம் இந்த விவரத்தை கொடுத்துள்ளார். இவர் 2006ம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டபோது சமர்ப்பித்த சொத்து பட்டியலில், ரொக்கம், 6 லட்ச ரூபாயும், டாடா சுமோ, இரண்டு டிராக்டர், மூன்று டிரெய்லர், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நகை, 77 லட்ச ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளான நிலம், வீடு, வணிக வளாகம் இருப்பதாகவும், 34 லட்ச ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகியோர், வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த, 2004ம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு கடலூர் மற்றும் சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு, தற்போது சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மேல் முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் உள் ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக