உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 24, 2011

சிதம்பரத்தில் மாதம் முழுவதும் மின் கட்டணம் செலுத்த ஏப்ரல் மாதம் முதல் புதிய திட்டம் அமல்

சிதம்பரம் : 

            சிதம்பரத்தில் மாதம் முழுவதும் மின் கட்டணம் செலுத்தும் புதிய திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

இதுகுறித்து சிதம்பரம் மின்துறை செயற்பொறியாளர் செல்வசேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

              குறைந்த மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மின் கட்டண கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் தற்போதுள்ள நடைமுறை மாற்றப்படுகிறது. மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வகையில் கடலூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டத்தை அமல்படுத்திட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உத்தேசித்துள்ளது. 

              நடைமுறையில் உள்ள 16ம் தேதி முதல் கணக்கீடு செய்தல், 1ம் தேதி முதல் வசூல் செய்யும் முறை மாற்றப்பட்டு 1ம் தேதி முதல் மாதம் கடைசி வரை கணக்கீடு, கணக்கீடு முடிந்து இரண்டாம் நாளில் இருந்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படுகிறது.ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. புதிய முறையின் மூலம் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு எளிதில் மின் கட்டணம் செலுத்த வசதியாக இருக்கும். இந்த புதிய திட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை கணக்கடு செய்த நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். 

                தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராத தொகை வசூலிக்கப்படும். நடைமுறையில் உள்ளபடி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறைதான் புதிய முறையிலும் பின்பற்றப்படும். ஆனால் கணக்கெடுப்பு 16ம் தேதிக்கு பதில் 1ம் தேதி தொடங்கும். மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டண அட்டையை மீட்டருக்கு அருகில் வைக்குமாறும் பணம் செலுத்த வரும்போதும் வெள்ளை அட்டையை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே மாதம் முழுவதும்வேலை நாட்களில் பணம் செலுத்தும் வசதியினை பயன்படுத்தி, புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior