உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 24, 2011

வேட்பாளரின் செலவு விவரத்தை பணம் கட்டி பெறலாம்

நெய்வேலி : 

           ""வேட்பாளரின் தேர்தல் செலவு குறித்து யார் வேண்டுமானாலும் ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்து தகவல் கேட்டால் அவர்களுக்கு அந்த தகவல் வழங்கப்படும்'' என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
               நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி உள்ளிட்ட நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் செலவு மற்றும் அரசியல்வாதிகள் நடவடிக்கை குறித்து கண்காணிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், தேர்தல் செலவு கண்காணிப்பாளர் தினேஷ்சிங் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் சீத்தாராமன் பேசியது:

            தேர்தல் செலவின் கண்காணிப்புக் குழுவினர் மூலம் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு நிழல் கண்காணிப்பு பதிவேட்டில் செலவினம் பதிவுகள் செய்யப்படும். கோயில், சர்ச், மசூதி போன்ற பகுதிகளின் அருகில் மத உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் பிரசாரம் செய்யக்கூடாது. பள்ளிக்கூடங்கள், தேர்வு மையங்கள் அருகே மேடை அமைத்தலோ, பிரசாரமோ செய்யக்கூடாது. வழி நெடுகிலும் பெரிய ஆர்ச்சுகள், பாதை நெடுக கட் அவுட்கள், கொடிகள், லைட் கம்பங்கள் நடக்கூடாது. போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது. 

                ஒரே இடத்தில் இரு கட்சிகளை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும் போது காவல்துறையினர் முன்னுரிமையின் அடிப்படையில் நேரத்தை ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்க வேண்டும். தேர்தல் செலவுக்கான பண பரிமாற்றங்கள் முழுவதும் காசோலைகளாகத்தான் இருக்க வேண்டும். வேட்பாளரின் தேர்தல் செலவு குறித்து யார் வேண்டுமானாலும் ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்து தகவல் கேட்டால் அவர்களுக்கு அந்த தகவல் வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior