உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 05, 2011

வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம்

              கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இநத ஏரியின் மொத்த நீர்மட்ட அளவு 47.50 அடி. கோடை காலத்தில் விவசாயத்தை சமாளிப்பதற்காகவும் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கும் வீராணம் ஏரியின் நீர் மட்டத்தை 44.50 அடிக்கு குறையாமல் பொதுப் பணித்துறை அதிகாரிகள் பாதுகாத்து வந்தனர்.

               அதிக அளவு தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பதற்காக வீராணம் ஏரியை தூர்வார அரசு உத்தரவிட்டது. இதனால் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வீராணம் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளிடம் கரையை உயர்த்தி பலப்படுத்துவதற்கு வீராணம் ஏரியின் மேல்கரை பகுதியில் மணல் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியை தூர்வார கீழணையில் இருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் வீராணம் ஏரியில் படிப்படியாக நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது.
 
            ஆனாலும் சென்னைக்கு வழக்கம் போல் 76 கன அடி தண்ணீர் எந்தவித தடையுமின்றி அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏரியின் நீர்மட்டம் கணிசமான அளவு குறைந்தது. இதனால் 10 கன அடி தண்ணீர் மட்டுமே சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று ஏரியின் நீர்மட்டம் 39.70 அடியாக திடீரென்று குறைந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நேற்று முதல் முற்றிலுமாக நிறுத்தப் பட்டது. மேலும் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதும் நிறுத்தப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior