உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 05, 2011

கடலூர் மாவட்டத்தில் குறைகேட்பு கூட்டங்கள் மே 16 வரை ரத்து

 கடலூர்:

            சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அனைத்து மக்கள் குறைகேட்கும் கூட்டங்களும் மே 16 வரை நடைபெறாது என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார். 

ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

            தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1-3-2011 முதல் அமுலுக்கு வந்துள்ளதால், வாராந்திர மக்கள் குறைகேட்கும் கூட்டங்கள் போன்ற கூட்டங்களை நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.எனவே வாரம்தோறும் திங்கள்கிழமைகளில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைகேட்கும் கூட்டங்கள், 16-5-2011 வரை நடைபெறாது. எனினும் பொதுமக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகளை நிறைவேற்றிட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. 

                மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை, மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம். மனுக்கள் பிரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைக்காக, உரிய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும், செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior