சிதம்பரம் :
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளில் இலக்கியம் மற்றும் கலாசாரம் எவ்வாறு மாறுபட்டு ஒரு புதிய இலக்கியத்திற்கு வழிகாட்டியுள்ளது என்பதை மையமாக வைத்து கருத்தரங்கம் நடந்தது. ஆங்கிலத்துறைத் தலைவர் தானுவலிங்கம் வரவேற்றார். துணைவேந்தர் ராமநாதன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவர் கீதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மராட்டிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து இளம் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மொழிபெயர்ப்புத்துறை முன்னாள் இணை இயக்குனர் பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாண்டியன், புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய இணை பேராசிரியர் ஞானசேகரன், சென்னை எத்திராஜ் கல்லூரி துணை பேராசிரியர் சசிகலாதேவி, கலைப்புல முதன்மையர் செல்வராஜ், மதுரை ஆர்.எல். கல்விக் கழகங்களின் கல்வி ஆலோசகர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவு விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி, கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினார். கருத்தரங்கில் 150க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கருத்தரங்கின் இயக்குனர் அன்பானந்தம் தலைமையில் இணை பேராசிரியர்கள் விஜயா, தினகரன் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக