கடலூர்:
அஞ்சல் வழி வாக்களிக்க கடலூர் தாலுகாவில் ஆயிரம் படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதில் ராணுவத்தினர் 74 பேருக்கு படிவங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இது குறித்து கடலூர் வட்டாட்சியர் அசோகன் சனிக்கிழமை கூறுகையில்,
"ராணுவத்தில் பணிபுரிவோர் வாக்களிக்க வசதியாக 74 பேருக்கு தபால் வாக்குகளுக்கான படிவங்கள் அடங்கிய தபால் தில்லியில் உள்ள ராணுவத் தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. காவல்துறையில் பணிபுரியும் 1200 பேர், பிற துறைகளில் பணிபுரிவோர் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான படிவங்களை, வாங்கிச் சென்று இருப்பதாகவும் அசோகன் தெரிவிதார். தபால் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள், தங்கள் தேர்தல் படிவங்களைப் பூர்த்தி செய்து, தேர்தல் பணியாணையை இணைத்து, வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக