விருத்தாசலம்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் விருத்தாசலத்திலிருந்து அந்தந்த தொகுதிகளுக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டது. விருத்தாசலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் வரும் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறும் 14-வது சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடந்த மாதம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
தற்போது தேர்தல் நாள் நெருங்கியுள்ள நிலையில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தத் தொகுதி உதவித் தேர்தல் அலுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய தொகுதிகளுக்கு 2500 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 3475 பேலட் யூனிட்டுகள் உள்பட 5975 இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்களை தொகுதி உதவி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கும் போது மாவட்ட ஆட்சியர் சீதாராமன், விருத்தாசலம் உதவித் தேர்தல் அலுவலர் சரவணன், தேர்தல் துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு உள்பட பலர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக