உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, ஏப்ரல் 30, 2011

பி.எட்.எம்.எட்.மாணவர்களுக்கு மே 27ல் தேர்வுகள் தொடக்கம்

           பி.எட்., எம்.எட்., பயிலும் மாணவர்களுக்கு மே 27 தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.ஆர்.வீரமணி தெரிவித்தார்.

பண்ருட்டி வட்டம் கீழக்கொல்லையில் உள்ள கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்ற மிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.ஆர்.வீரமணி  பேசுகையில்,

            பி.எட்., எம்.எட். பாடத் தேர்வுகளுக்கு பிறகு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். முதல்முறையாக விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க உள்ளோம்.இப்பயிற்சி சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய 5 மையத்தில் நடக்கவுள்ளது. இதில் கருத்தியல், செய்முறை விடைத்தாள்களை எப்படி திருத்துவது, மதிப்பெண் அளிப்பது குறித்து பயிற்சி அளிக்க உள்ளதாகவும், குறைபாடு இல்லாமல் இருக்கவே இதுபோன்ற நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior