உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 30, 2011

கடலூர் மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-


              சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் விதி மீறல்களை கண்காணிப்பதற்காக தேர்தல் நடத்தை விதி கண்காணிப்பு குழு, வீடியோ நிலைக் குழு, பறக்கும்படை என 3 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த 3 குழுக்களும் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் விதி மீறல்களை வீடியோவில் பதிவு செய்துள்ளன.

              அந்த வீடியோ பதிவுகளை தொகுதி வாரியாக பிரித்து வீடியோ பதிவை பார்வையிடும் குழுவிடம் ஒப்படைத்துள்ளன. அந்த குழு ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் எவ்வளவு தேர்தல் செலவு ஏற்பட்டுள்ளது என்பதை நிழற்பதிவேட்டில் பதிவு செய்கின்ற பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதில் 75 சதவீத பணிகள் முடிந்து விட்டன.

             இந்த பணிகள் முடிந்த பின்னர் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யக் கோரி மே முதல் வாரத்தில் நோட்டீசு அனுப்பப்படும். அதன் பின்னர் அவர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த தேர்தல்களை போல அல்லாமல் இந்த தேர்தலின்போது வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை பராமரிக்க தனியாக ஏஜெண்ட் ஒருவரை நியமித்துக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

            மேலும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்வதற்காக அவர்களுக்கு 3 வகையான பதிவேடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி வெள்ளை நிற பதிவேட்டில் அன்றாட கணக்குகளை எழுத வேண்டும். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள பதிவேட்டில் ரொக்கம் குறித்தும், மஞ்சள் நிற பதிவேட்டில் வங்கி கணக்கு குறித்த விவரங்களையும் எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
வேறுபாடுகள் இருந்தால்.. 
 
             அதன்படி செலவு கணக்கை தாக்கல் செய்ய வருகின்ற வேட்பாளர்கள் இந்த 3 பதிவேடுகளையும் கொண்டு வரவேண்டும். வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள செலவு கணக்கை எங்களிடம் உள்ள நிழற்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள செலவு கணக்கோடு ஒப்பிட்டு பார்ப்போம். அதில் ஏதாவது வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான ஆவணங்களை வேட்பாளர்களிடம் ஒப்படைப்போம்.

                 பின்னர் அவற்றை திருத்தி செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.   எனவே வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்போது உண்மை யான செலவின கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்த பின்னர் அவற்றை தேர்தல் செலவின பார்வையாளர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைப்போம். அவர்கள் கணக்குகளை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார்கள். பொதுப் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

                மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகளுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பும் ஒரு கேமரா பொருத்தப்பட்டு லேப்டாப் மூலம் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுப் பார்வையாளர்களும் வருகிற 11-ந் தேதி கடலூர் வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior