உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், ஏப்ரல் 28, 2011

கடலூரில் ஏப்ரல் 30 ம் தேதி முதல் செயற்கை நகைகள் செய்ய பயிற்சி முகாம்

கடலூர் : 

            கடலூரில் மத்திய அரசின் கே.வி.ஐ .சி., மூலம் செயற்கை நகை செய்யும் பயிற்சி நடக்கிறது. 

           கடலூரில் மத்திய அரசின் அங்கமான கதர் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் பெண்கள் வீட்டிலிருந்தபடியே தங்களுக்குத் தேவையான செயற்கை அழகு வளையல்கள், முத்து மாலைகள், கம்மல், கொலுசு போன்றவற்றை தயார் செய்யும் குறுகிய கால சிறப்பு பயிற்சி முகாம் வரும் 30 ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது. இம்முகாமில் முன்பதிவு செய்யும் முதல் 30 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். பயிற்சிக்குப் பின்னர் மத்திய அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு தொழில் தொடங்க 20 முதல் 30 சதவீதம் வரை மானியத்துடன் கடன் பெறமுடியும். மேலும் வங்கிக்கடன் எப்படி பெறுவது போன்றவற்றுக்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். 

             இதுகுறித்த தகவல்களுக்கு 93676 22256 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அலங்கார செயற்கை நகைகள் குறித்த பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர் அக்குபஞ்சர் டாக்டர் ரவி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior