கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பெ.சீதாராமன் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் சராசரி 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தொகுதி வாரியாகப் பதிவான வாக்குகள் சதவீதம்:
திட்டக்குடி 79 சதவீதம்,
விருத்தாசலம் 80.88 சதவீதம்,
பண்ருட்டி 82 சதவீதம்,
குறிஞ்சிப்பாடி 86.3 சதவீதம்,
புவனகிரி 80 சதவீதம்,
சிதம்பரம் 77.2 சதவீதம்,
காட்டுமன்னார்கோயில் 76.77 சதவீதம்,
கடலூர் 78 சதவீதம்,
நெய்வேலி 70 சதவீதம்.
இயந்திரத்தில் கோளாறு:
காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய உடனேயே பல வாக்குச் சாவடிகளில் ஆண், பெண் வாக்காளர் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடலூரை அடுத்த கிழக்கு ராமாபுரம் 34-ம் எண் வாக்குச் சாவடியில் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும், இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. வாக்குச்சாவடி அலுவலர்கள் இயந்திரக் கோளாறை சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. இதனால் 2 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. பின்னர் மற்றொரு வாக்குப்பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு, வாக்குப்பதிவு தொடங்கியது. ப
ண்ருட்டி தொகுதிக்கு உள்பட்ட எய்தனூர் கிராம வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் கோளாறு காரணமாக 15 நிமிடம் தாமதம் ஆனது. வாக்குப் பதிவு தொடங்கியதும், கடலூர் நகரப் பகுதிகளில் நீண்ட வரிசைகளைக் காண முடிந்தது. வாக்குப்பதிவு தொடங்கி 2 மணி நேரத்தில், கடலூர் மாவட்டத் தொகுதிகளில் 25 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டன. 11 மணிக்கு குறிஞ்சிப்பாடியில் 32 சதவீதம், விருத்தாசலத்தில் 30 சதவீதம், பண்ருட்டியில் 30 சதவீதம், சிதம்பரத்தில் 28 சதவீதம், புவனகிரியில் 26 சதவீதம், கடலூரில் 21 சதவீதம், நெய்வேலியில் 20 சதவீதம், திட்டக்குடியில் 19 சதவீதம், காட்டுமன்னார் கோயிலில் 18 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன
÷நடுவீரப்பட்டு அரசு பள்ளி வாக்குச்சாவடியில் காலை 11 மணிக்கு 40 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டன. இந்த வாக்குச் சாவடியை தேர்தல் பொதுப் பார்வையாளர் டோக் ரஜூர்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பகல் 1 மணிக்கு கடலூர் மாவட்டத்தில் சராசரியாக 48 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. திட்டக்குடியில் 51%, விருத்தாசலத்தில் 51, நெய்வேலியில் 40, பண்ருட்டியில் 53, கடலூரில் 48, குறிஞ்சிப்பாடியில் 47, புவனகிரியில் 55, சிதம்பரத்தில் 42, காட்டுமன்னார்கோயிலில் 45 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.
மாலை 3 மணிக்கு பண்ருட்டியில் 72% மாலை 3 மணிக்கு கடலூர் மாவட்ட வாக்குச்சாவடிகளில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. திட்டக்குடி தொகுதியில் 62, விருத்தாசலத்தில் 62, நெய்வேலியில் 51, பண்ருட்டியில் 72, கடலூரில் 61, குறிஞ்சிப்பாடியில் 72, புவனகிரியில் 62, சிதம்பரத்தில் 57, காட்டுமன்னார்கோயிலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக