கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மை துறை முதன்மையர் ராஜராஜன் கூறியது:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிரிவில் பி.எஸ்சி தோட்டக்கலை, வேளாண்மை, மனையியல், பி.டெக் வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை, உணவு பதப்படுத்துதல், உயிரி தொழில்நுட்பவியல், உயிரி தகவல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை என 12 துறைகளும், முதுகலை எம்.எஸ்சி பிரிவில் வேளாண்மை உள்ளிட்ட 27 துறைகள், பி.எச்டி பிரிவில் 27 துறைகள் உள்ளன. மேட்டுப்பாளையம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் 10 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் மே முதல் வாரத்தில் வினியோகிக்கப்படும். விண்ணப்பங்களை பல்கலை.யின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ராஜராஜன் கூறினார்.
http://www.tnau.ac.in/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக