உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, ஏப்ரல் 23, 2011

கடலூரில் கத்தரிக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி


நாணமேடு விவசாயி ஆனந்தனின் தோட்டத்தில் கத்தரிக்காய் பறிக்கும் பெண்கள்.
 
கடலூர்:

                 கடலூரில் கத்தரிக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.

           கடலூர் காய்கறி அங்காடிகளில் உள்ளூர் கத்தரிக்காய் கிலோ ரூ.8 முதல் ரூ. 10 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை போக்குவரத்துச் செலவு உள்பட கிலோவுக்கு ரூ.3 அல்லது ரூ.4 வரைதான். கடலூர் பகுதியில் நாணமேடு உச்சிமேடு, சுப உப்பளவாடி உள்ளிட்ட கிராமங்களிலும் பண்ருட்டி பகுதிகளிலும் 500 ஏக்கரில் கத்தரிக்காய் பயிரிடப்பட்டு உள்ளது. நல்ல விளைச்சல் தரும் செம்பட்டி ரகம் பயிரிடப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதத்தில் நாற்றுவிட்ட கத்தரிச் செடிகளில், 15 நாள்களாக கத்தரிக்காய் அறுவடை நடைபெற்று வருகிறது. முற்றல் மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான கத்தரிக்காய்களை தோட்டத்தின் அருகே கொட்டி வைத்துள்ளனர்.

             கடந்த ஆண்டு கடலூர் பகுதி விவசாயிகளுக்கு கத்தரி மகசூல் நல்ல லாபம் கிடைத்தது. கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 15 வரை விலை கிடைத்தது. அதை நம்பி இந்த ஆண்டும் கத்தரிக்காய் பயிரிட்டனர். ஆனால் இந்த ஆண்டு கிலோவுக்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரை தான் விலை கிடைக்கிறது என்கிறார்கள் கடலூர் விவசாயிகள். மேலும் இந்த ஆண்டு கத்தரிச் செடிகளில் பூச்சித் தாக்குதலும் அதிகரித்து இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.÷இதனால் கத்தரி விவசாயிகளுக்கு செலவு செய்த பணம்கூட கிடைக்காது என்ற அவல நிலை உருவாகி இருக்கிறது.

இது குறித்து நாணமேடு விவசாயி ஆனந்தன் கூறுகையில், 

             கடந்த ஆண்டு 3 ஏக்கரில் கத்தரி சாகுபடி செய்து இருந்தேன். கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 15 வரை விலை கிடைத்தது. இந்த ஆண்டு 100 நாள் வேலைத் திட்டம் காரணமாக, விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைக்காததால், ஒரு ஏக்கரில் மட்டுமே கத்தரி பயிரிட்டேன். ஆனால், கத்தரிச் செடிகளில் குருத்துப்புழு உள்ளிட்ட பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. நியாயமான விலையும் கிடைக்கவில்லை. வண்டிகளில் ஏற்றி கடலூர், புதுவை அங்காடிகளுக்குக் கொண்டு சென்று, கமிஷன் வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம். கிலோவுக்கு ரூ. 3 அல்லது ரூ. 4 தான் கிடைக்கிறது.

             கடந்த 15 நாள்களில் ரூ.500க்கு தான் கத்தரிக்காய் விற்பனை செய்து இருக்கிறேன். ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து இருக்கிறேன். செலவு செய்த பணம் கூட கிடைக்காது என்றார்.

காரணம் என்ன?

கடலூர் திருப்பாப்புலியூர் பான்பரி மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரி பக்கிரான் கூறுகையில், 

              பண்ருட்டி நாணமேடு பகுதிகளில் இருந்து கிலோ ரூ. 3 க்கு கத்தரிக்காய் கொள்முதல் செய்கிறோம். கடந்த ஆண்டு கத்தரிக்காய் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது. அதை நம்பி இந்த ஆண்டு கூடுதல் நிலங்களில், விவசாயிகள் கத்தரி பயிரிட்டனர். உற்பத்தி அதிகமானதால் விலை வீழ்ச்சி அடைந்து விட்டது என்றார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior