கடலூர்:
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயன ஆலைகளை அகற்றக் கோரி, கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவினால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். உடனடியாக மூடப்பட்ட அந்த ஆலை, ஒரு மாதத்துக்குப் பின், நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கிறது.சிப்காட் ரசாயன ஆலைகள் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமலும், விதிமுறைகள் பின்பற்றப் படுகின்றனவா என்று முறையாகக் அதிகாரிகளால் கண்காணிக்கப் படாததாலும், இந்த ரசாயன ஆலைகளால் கடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் சுற்றுச்சூழல், வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே சுற்றுச்சூழலை நாசமாக்கும் ரசாயன ஆலைகளை அகற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மனித உரிமைப் பாதுகாப்பு மையம், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். குடிகாடு ரவி, வீரமணி, ராஜு, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக