உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 29, 2011

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாணவர்கள் அவதி

விருத்தாசலம்:

            விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தும், கல்லூரி மாணவர்கள், கல்லூரி செல்வோருக்கு காவலர்களின் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நாள்தோறும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

                விருத்தாசலம், திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வரலாற்றுத்துறை கட்டடத்தை சுற்றிலும் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் உயர் கோபுரங்கள் அமைத்து போலீஸôர் மையத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.கல்லூரியில் தற்போது மாணவர்களுக்கு அரசு பல்கலைக் கழகத் தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. 

                இத்தகைய நிலையில் பலத்த பாதுகாப்புகள் இருந்தும் கல்லூரி செல்லும் மாணவர்களை சோதனை செய்த பின்னரே கல்லூரிக்குள் அனுப்புகின்றனர்.தற்போது தேர்வுகள் நடைபெறுவதால் இதுபோன்ற நிலை ஏற்படும் போது மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் தேர்வுகளை சரியாக எழுத முடியவில்லை என அவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும் போலீஸôர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற நடவடிக்கைகளை கையாளும் நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு காலந்தாழ்ந்து செல்லும் அவலமும் நிலவுவதாக கூறுகின்றனர்.

                ஜங்ஷன் சாலையில் உள்ள கல்லூரி முதன்மை நுழைவுவாயிலில் காவலர்கள் சோதனைசாலை அமைத்து இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை என மறுக்கின்றனர். இதனால் கல்லூரி வழியில் உள்ள வீடுகளுக்குச் செல்வதற்கு சுமார் 500 மீட்டர் தூரத்துக்குச் சுற்றி வர வேண்டிய நிலையும் உள்ளது. மேலும், கல்லூரி வழியாக கல்லூரி நகர், நாச்சியார்பேட்டை, கல்லூரி மாணவர் விடுதி, நகர விளையாட்டரங்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்களிடம் காவல்துறையினர் சோதனை என்ற அடிப்படையில் அவர்களின் காலத்தை வீணடிப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர். 

                  இதனால் பொதுமக்கள் காவல்துறையினர் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர்.வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பலகட்ட பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மையம் அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுத்துறையும், தற்போது கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வரும் மற்ற துறை கட்டடங்களும் வெவ்வேறு பகுதியில் இயங்கி வருவதால் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, மாணவர்களையும், மாணவர்களை தேடிவரும் பெற்றோர்களையும், கல்லூரி அலுவல் நிமித்தமாக வருபவரிடமும் காவல்துறையினர் கெடுபிடிகள் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என கருதுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior