உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 09, 2011

கடலூரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் 117வது புதிய கல்வி தகவல் மைய திறப்பு விழா

கடலூர் : 

               அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் 117வது புதிய கல்வி தகவல் மைய திறப்பு விழா கடலூரில் நடந்தது.
 
                     துணை வேந்தர் ராமநாதன் தலைமை தாங்கினார். பதிவாளர் ரத்தினசபாபதி, இயக்குனர் நாகேஸ்வரராவ், பி.ஆர்.ஓ., செல்வம் முன்னிலை வகித்தனர். சிறப்பு அதிகாரி சுதா வரவேற்றார். ஆளவை மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன், சண்முக சுந்தரம், கல்விக்குழு உறுப்பினர் திருமால், ராஜேந்திரன், அரிமா வெங்கடேசன், புதுச்சேரி தனி அதிகாரிகள் ஸ்ரீதர், ஜாகீர் உசேன், நெடுமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
பின்னர் துணைவேந்தர் ராமநாதன் கூறியது: 
                  
               அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 575 பாடப்பிரிவுகள் உள்ளன. 116 தகவல் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. கடலூரில் 117 மையம் திறக்கப்பட்டுள்ளது. இவற்றில் 25 வெளி மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் 80 கல்வி மையங்கள் உள்ளன. மாணவர்கள் வசதிக்காக 30 கி.மீ., ஒரு தகவல் மையம் வேண்டும் என்கிற அடிப்படையில் துவங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது 15 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்விக்கு செல்கின்றனர். ஆனால் மத்திய அரசு 2015ம் ஆண்டு அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதை நிறைவேற்ற இந்த பல்கலைக்கழகம் ஒத்துழைப்பு கொடுக்கும். இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior