உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், மே 09, 2011

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாடவாரியாக முதல் மூன்று இடங்கள் பெற்றவர்கள் விபரம்

 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாடவாரியாக முதல் மூன்று இடங்கள் பெற்றவர்கள் விபரம்


சிறப்பு தமிழ் :

            சிறப்பு தமிழ் பாடத்தில் தூத்துக்குடி எஸ்.வி., பள்ளி மாணவி சூர்யா 188 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 

            இரண்டாவது இடத்தை கடலூர் மாணவி பிரியங்கா பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் 184. 

              நாமக்கல் அரசு பள்ளி மாணவி செல்வலட்சுமி 184 மார்க்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.

 ஆங்கிலம்:

           ஆங்கில மொழி பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவிகள் மாநிலத்தில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர். மாணவி கே.ரேகா ஆங்கிலத்தில் 200க்கு 195 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

               இரண்டாவது இடத்தையும் ஓசூர் விஜய வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிதான் பெற்றுள்ளார். 2ம் இடம் பிடித்த மாணவியின் பெயர் பி.எஸ்.ரேகா. இவர் பெற்ற மார்க் 195. மொத்த மதிப்பெண் : 1186. 

             மூன்றாவது இடத்தை சென்னை சூளைமேடு டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி கே.அட்சயா பிடித்துள்ளார்.

 இயற்பியல்

               இயற்பியல் பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

              இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி பெற்றுள்ளார். இவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் : 1189.

             மூன்றாவது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இயற்பியலில் 200 மார்க்குகள் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1188.

வேதியியல்:
  
           வேதியியல் பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

           இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி பெற்றுள்ளார். இவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் : 1189.

       மூன்றாவது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இவரது மொதிப்பெண் 1188.

 கணிதம்

             ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா கணித பாடத்தில் 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

              இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி பெற்றுள்ளார். இவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் : 1189.

             மூன்றாவது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இவரது மொதிப்பெண் 1188.

கணினி அறிவியல்:

               கணினி அறிவியல் பாடத்தில் செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி 200க்கு 200 பெற்று முதல் மார்க் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. 

             இரண்டாவது இடத்தை கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா பெற்றுள்ளார். கணிணி அறிவியிலில் 200 மார்க்குகள் எடுத்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1181. 

          மூன்றாவது இடத்தை திருச்சி ஆர்.எஸ்.கே., பள்ளி மாணவி திவ்யா பெற்றுள்ளார்.இவரது மொத்த மதிப்பெண் 1174. கணினி அறிவியலில் 200 மார்க்குகள் பெற்றுள்ளார்.


உயிரியல்

             ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா உயிரியல் பாடத்தில் 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

               இரண்டாவது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இவர் உயிரியல் பாடத்தில் பெற்ற மார்க் : 200 ; இவரது மொத் மதிப்பெண் 1188. 

                மூன்றாவது இடத்தை நாமக்கல் மாவட்ட கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவி தக்சினி பெற்றுள்ளார். அவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் 1187 ஆகும். 

தாவரவியல் 

              தாவரவியல் பாடத்தில் திருவாரூர் ரஹ்மத் மெட்ரிக் பள்ளி மாணவி அயனுல்மர்லியா, 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவரது மொத்த மார்க்குகள் 1167. 

             இரண்டாவது இடத்தை தக்கலை புனித மேரி ஜார்ஜெட்டி பள்ளி மாணவி இர்பான் பிடித்துள்ளார். இவரது மொத்த மார்க்குகள் 1150. 

              மூன்றாவது இடத்தை அருப்புக்கோட்டை எஸ்.எச்.என்., எத்தல் ஹார்வி பள்ளி மாணவி எஸ். மாலதி பிடித்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1094. தாவரவியலில் இவர் 200 மார்க்குகள் பெற்றுள்ளார்.

விலங்கியல்

            இந்த ஆண்டு விலங்கியல் பாடத்தில் ஓருவர் கூட சென்டம் ( முழு மதிப்‌பெண் ) பெறவில்லை. 

              200க்கு 199 மார்க்குகள் பெற்று சேரன்மாதேவி, வீரவநல்லூர் புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சிவகாமி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். 

               2வது இவத்தை சிவகங்கை மாவட்டம் எஸ்,ஏ.பட்டினம் சகாயராணி பெண்கள் பள்ளி மாணவி ஏ.சங்கீதா பிடித்துள்ளார். இவரது மொத்த மார்க் 1082. விலங்கியல் பாடத்தில் இவர் பெற்ற மதிப்பெண் 199. 

               கோவை மாவட்டம் சர்கார்சமக்குளம் அரசு பள்ளி மாணவி எல். சண்முகப்பிரியா 200க்கு 199 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பிடித்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1089 

பொருளாதாரம் 

                பொருளாதாரம் பாடத்தில் சென்னை மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவர் ஈஸ்வர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 

              இரண்டாவது இடத்தை சின்மய வித்யாலயா பள்ளி மாணவி அட்சயா பிடித்துள்ளார். இவரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

          மூன்றாவது  இடத்தை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவி ஜனனி பெற்றுள்ளார்.

வணிகவியல் 

              வணிகவியல் பாடத்தில் சென்னை மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 

               சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவர் ஈஸ்வர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 

              இரண்டாவது இடத்தை சின்மய வித்யாலயா பள்ளி மாணவி அட்சயா பிடித்துள்ளார். இவரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

           மூன்றாவது இடத்தை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவி ஜனனி பெற்றுள்ளார் 

கணக்குப் பதிவியல் 

             அக்கவுன்டன்சி பாடத்தில் சென்னை மாணவர் மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார். சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவர் ஈஸ்வர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 

               இரண்டாவது இடத்தை சின்மய வித்யாலயா பள்ளி மாணவி அட்சயா பிடித்துள்ளார். இவரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

               மூன்றாவது இடத்தை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவி ஜனனியும், சென்னை அண்ணா ஆதர்ஷ் பள்ளி மாணவி நித்யா பி‌னோய் மாணவனும் பெற்றுள்ளனர்

அடிப்படை அறிவியல்

                அடிப்படை அறிவியல் பாடத்தில் திண்டுக்கல் மாணவி ஜெ. லயோலா 200க்கு 193 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1072. 

                இரண்டாவது இடத்தை 200க்கு 191 மார்க்குகள் பெற்று குளித்துறை மார்த்தாண்டம் எல்.எம்.எஸ்., பள்ளி மாணவி கே.சந்தியா பெற்றுள்ளார். 

              மூன்றாவது இடத்தை திருநெல்வேலி பாளையம்கோட்டை புனித இக்னேசியஸ் பள்ளி மாணவி ஏ.மஞ்சு பெற்றுள்ளார். இவர் 20க்கு 186 மார்க்குகள் பெற்றுள்ளார். 

புவியியல் :

             புவியியல் பாடத்தில் எந்த ஒரு மாணவ, மாணவியும் 200க்கு 200 மார்க்குகள் பெறவில்லை. 

                200க்கு 199 மார்க்குகள் பெற்று சென்னை எல்.எப்.சி., மேல்நிலைப் பள்ளி ( கண்பார்வையற்றவர்களுக்காகன சிறப்பு பள்ளி) மாணவிகள் முதல் 3 இடத்தையும் பிடித்துள்ளனர். 

             பி.ஏ., சங்கீதா முதலிடம் பெற்றுள்ளார். புவியியல் மார்க் - 199. மொத்த மார்க் 1095. 

             இரண்டாவது இடத்தை எஸ்.துர்கா தேவி. புவியியல் மார்க் - 199. மொத்த மதிப்பெண் 1077.  

                மூன்றாவது இடத்தை டி. வென்னிலா. புவியியல் பாடம் : 199. மொத்த மதிப்பெண் 1084.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior