கடலூர்:
முந்தைய தி.மு.க. அரசைவிட, முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் சமூகநலத் துறை திட்டங்கள், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்று தமிழக சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தெரிவித்தார்.
சமூக நலத்துறை அமைச்சர் பொறுப்பு ஏற்றதும், முதல்முறையாக செல்வி ராமஜெயம் சனிக்கிழமை கடலூர் வந்தார். மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் ஊழியர்கள் திரளாக வந்து, அமைச்சர் செல்வி ராமஜெயத்தை வரவேற்றனர். சமூகநலத் துறை திட்டங்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில்,
"முந்தைய ஆட்சியைவிட சமூகநலத் துறை திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக நடத்துவார். தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, முதியோர், விதவையர், ஆதரவற்றோர் மற்றும் திருமணம் ஆகாத 50 வயதுக்கு மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ. 500-ல் இருந்து ரூ. 1,000-ஆக உயர்த்தி இருக்கிறார். இந்தத் தொகை ஜூன் 1-ம் தேதியில் இருந்து 7-ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டுவிடும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக