கடலூர் : "
"கடலூர் செம்மண்டலத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத் கூறினார்.
கடலூரில் ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத் கூறியது:
முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் நலன் கருதி 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை வரும் 1ம் தேதி துவக்கி வைக்கிறார். கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 60 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளது. இதில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 525 பேர் 20 கிலோ அரிசி பெறும் பயனாளிகள் ஆவர். இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் அரசு விழாவாக வரும் 1ம் தேதி நடக்கிறது.
கடலூர் நகரில் நடைபாதை சீரமைக்கப்படும். தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தவிர்க்கப்படும். ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது போல் சில்வர் பீச் புதுப்பித்து படகு குழாம் சீரமைக்கப்படும். கோடை விழா அடுத்த ஆண்டு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் செம்மண்டலத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சம்பத் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக