தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு சென்னை, கிரீன் வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இந்த பங்களா வீடுகளில் அமைச்சர்கள் தங்களது குடும்பத்துடன் இன்னும் சில தினங்களில் குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, அக்கட்சியை சேர்ந்த 33 எம்.எல்.ஏ.,க்கள் கடந்த வாரம் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு அரசு சார்பில் பங்களா வீடுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த வீடுகள் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு முக்கிய பிரமுகர்கள் குடியிருப்பில் அமைந்துள்ளன. மொத்தம் 26 வீடுகள் கொண்ட இந்த பங்களா குடியிருப்பில், கடந்த ஐந்து வருடங்களாக தி.மு.க.,வை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் வசித்து வந்தனர்.
தேர்தலில் தி.மு.க.,தோல்வியடைந்ததையடுத்து அவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற அரசு உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து மாஜி அமைச்சர்களும் தங்களது வீடுகளை காலி செய்தனர். இதையடுத்து, அந்த பங்களா வீடுகளை புதிய அமைச்சர்களின் பயன்பாட்டிற்காக புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், புதிய அமைச்சர்களுக்கான வீடுகள் ஒதுக்கீடு பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
* ஓ.பன்னீர் செல்வம் (நிதியமைச்சர்)
* செங்கோட்டையன் (வேளாண்மைத்துறை அமைச்சர்)
* விஸ்வநாதன் (மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்)
* கே.பி.முனுசாமி (நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்)
* சண்முகவேலு (தொழில்துறை அமைச்சர்)
* வைத்தியலிங்கம் (வீட்டு வசதித்துறை மற்றும் ஊரக வீட்டு வசதித்துறை அமைச்சர்)
* கிருஷ்ணமூர்த்தி (உணவுத்துறை அமைச்சர்)
* கருப்பசாமி (கால்நடைத்துறை அமைச்சர்)
* பழனியப்பன் (உயர்கல்வித்துறை அமைச்சர்)
* சண்முகம் (பள்ளிக் கல்வித்துறை)
* ராஜு (கூட்டுறவுத்துறை அமைச்சர்)
* பச்சைமால் (வனத்துறை அமைச்சர்)
* பழனிச்சாமி (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்)
* சண்முகநாதன் (இந்து அறநிலையத்துறை அமைச்சர்)
* ராமலிங்கம் (பொதுப்பணித்துறை அமைச்சர்)
* வேலுமணி (சிறப்பு பணிகள் செயலாக்கத்துறை அமைச்சர்)
* சம்பத் (ஊரக தொழில்துறை அமைச்சர்)
* தங்கமணி (வருவாய்த்துறை அமைச்சர்)
* கோகுல இந்திரா (வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்)
* செல்வி ராமஜெயம் (சமூக நலத்துறை அமைச்சர்)
* டி.வி.ரமணா (கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர்)
* ந.சுப்பிரமணியன் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்)
* செந்தில் பாலாஜி (போக்குவரத்துத்துறை அமைச்சர்)
* புத்திசந்திரன் (சுற்றுலாத்துறை அமைச்சர்)
* ஆர்.சிவபதி (விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்)என,
மொத்தம் 25 புதிய அமைச்சர்களுக்கு அரசு பங்களாவில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திகேயன் கூறுகையில்,
"இங்குள்ள 26 பங்களா வீடுகளுக்கும் புதிய அமைச்சர்களுக்கான வீடுகள் ஒதுக்கீடு பட்டியலை, அரசு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது குடியிருப்பில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். மீதமுள்ள அமைச்சர்கள் இன்னும் சில தினங்களில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் குடியேறுவர்' என்று கூறினார்.
விபத்தில் இறந்த மரியம்பிச்சைக்கு ஒதுக்கப்பட்ட பங்களா வீடு :
தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு, அரசு சார்பில் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான பட்டியல் ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது. அதில், கடந்த சில தினங்களுக்கு முன் கார் விபத்தில் இறந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாரியம்பிச்சைக்கும் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் அவரது வீடு மீதமுள்ள அமைச்சர்களில் ஒருவருக்கு வழங்கப்படலாம்' என தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக