கடலூர் :
கடலூர், பண்ருட்டியில் பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று துவங்கியது. பி.இ., மற்றும் பி.டெக்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள பலரும் சென்னைக்குச் சென்று விண்ணப்பங்கள் பெறுவதில் சிரமம் இருந்தது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, அண்ணா பல்கலைக்கழகம் மாவட்டம் தோறும் மற்றும் பல்கலைக்கழக படிப்பு மையங்களிலும் விண்ணப்பங்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரியில் மற்றும் படிப்பு மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் படி இந்தாண்டு பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கும் பணி துவங்கியது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர் பாடலீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியிலும், சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக், பண்ருட்டி (நெய்வேலி ஆர்ச்கேட் அருகே உள்ள) திருச்சி அண்ணா பல்கலைக் கழக படிப்பு மையத்திலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் பாடலீஸ்வரர் பாலிடெக்னிக் மையத்தில் நேற்று மதியம் வரை 800 விண்ணபங்கள் வழங்கப்பட்டது.
பண்ருட்டி:
சாத்திப்பட்டு சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருச்சி அண்ணா பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில் நேற்று காலை 9.30 மணிக்கு விண்ணப்பம் வழங்கும் பணி துவங்கியது. விண்ணப்பங்கள் பொறியியல் கல்லூரி புல முதல்வர் செந்தில்குமார் வழங்கி துவக்கி வைத்தார். விண்ணப்பங்கள் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வினியோகம் செய்வதாகவும், விண்ணப்பங்கள் வரும் 31ம் தேதி வரை கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்கு நேரடியாக மாணவர்கள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும் என புல முதல்வர் செந்தில்குமார் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக