கடலூர்:
கடலூர் மாவட்ட வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும் 6-ம் தேதி தொடங்கும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) சி.ராஜேந்திரன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட வருவாய் தீர்வாயம் இந்த மாவட்டத்தில் உள்ள 7 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும். வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாள்களில் சம்பந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலரிடம், பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் அளித்தால், சம்பந்தப்பட்ட துறை அலுவலரால் விசாரணை நடத்தி, தீர்வாய நாள்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும். மனுதாரர்கள் அனுப்பும் மனுவில் தங்கள் கிராமத்துக்கான ஜமாபந்தி நடைபெறும் தேதியைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.
வட்ட வாரியாக வருவாய் தீர்வாயம் நடைபெறும் தேதி, தீர்வாய அலுவலர் விவரம் வருமாறு:
குறிஞ்சிப்பாடி வட்டம்: மாவட்ட ஆட்சியர், 6 முதல் 13-ம் தேதி வரை.
விருத்தாசலம் வட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர், 6 முதல் 24-ம் தேதி வரை.
கடலூர் வட்டம்: வருவாய் கோட்டாட்சியர், கடலூர் 6 முதல் 16-ம் தேதி வரை.
சிதம்பரம் வட்டம்: வருவாய் கேட்டாட்சியர், சிதம்பரம் 6 முதல் 23-ம் தேதி வரை.
திட்டக்குடி வட்டம்: வருவாய் கோட்டாட்சியர் விருத்தாசலம் 6 முதல் 17-ம் தேதி வரை.
காட்டுமன்னார்கோயில் வட்டம்: மாவட்ட வழங்கல் அலுவலர், 6 முதல் 21-ம் தேதி வரை.
பண்ருட்டி வட்டம்: மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர், 6 முதல் 16-ம் தேதி வரை.
மேலும் விவரங்களுக்கு,
கடலூர் 04142- 295189.
பண்ருட்டி 04142- 242174.
குறிஞ்சிப்பாடி 04142- 258901.
சிதம்பரம் 04144- 222322.
காட்டுமன்னார் கோயில் 04144- 262053.
விருத்தாசலம் 04143- 238289.
திட்டக்குடி 04143- 255249
என்ற வட்டாட்சியர்களின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக