உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 03, 2011

கடலூர் அரசு ஐ.டி.ஐ.யில் பயில விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

           கடலூர் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ. மற்றும் மகளிர் ஐ.டி.ஐ. ஆகியவற்றில் சேர்ந்து பயில மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              கடலூர் செம்மண்டலத்தில் அமைந்துள்ள அரசு ஆண்கள் ஐ.டி.ஐ. மற்றும் மகளிர் ஐ.டி.ஐ. ஆகியவற்றில் கீழ்காணும் தொழில் பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயில ஆண், பெண் இருபாலரும் 21-6-2011 வரை விண்ணப்பிக்கலாம்.  பயிற்சிக் கட்டணம் எதுவும் கிடையாது. விதிகளுக்கு உள்பட்டு பயிற்சி பெறுவோருக்கு உதவித் தொகை அரசால் வழங்கப்படும். இலவச போக்குவரத்து வசதியும் உள்ளது.  விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு அரசு உதவித் தொகை கிடைக்கும். இலவச விடுதி வசதியும் உண்டு.  

பாடப் பிரிவுகள், கல்வித் தகுதி மற்றும் பயிற்சியாளர்களுக்கான இடங்கள் விவரம்: 

பொருத்துநர், 10-ம் வகுப்பு, 104 இடங்கள். க
டைசலர் 10-ம்வகுப்பு, 78 இடங்கள். 
இயந்திர வேலையாள், 10-ம் வகுப்பு, 16 இடங்கள். 
கம்மியர் (மோட்டார் வண்டி), 10-ம் வகுப்பு, 21 இடங்கள்.  
கம்பியாள் 8-ம் வகுப்பு, 42 இடங்கள். 
வெல்டர் 8-ம் வகுப்பு, 125 இடங்கள். 
பிளாஸ்டிக் வழிமுறைப் பணியாளர், 10-ம் வகுப்பு, 125 இடங்கள். 
கணினி இயக்குநர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் 12-ம் வகுப்பு, 52 இடங்கள் 

என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior