உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 20, 2011

சிதம்பரம் அண்ணாமலை நகர் மேம்பால சுவற்றில் அழகான ஓவியங்கள் மீது அரசியல் போஸ்டர்

சிதம்பரம் : 

      கடலூர் மாவட்டம், அண்ணாமலை நகர் மேம்பால சுவற்றில் வரையப்பட்டுள்ள அழகிய ஓவியங்கள் மீது, அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளது அப்பகுதியினரை முகம்  சுளிக்க வைத்துள்ளது.
 
        அரசுக்கு சொந்தமான இடங்கள் என்றாலே அரசியல் கட்சியினருக்கு அத்தனை சுதந்திரம். சொந்த இடமாக உரிமை கொண்டாடி இஷ்டத்துக்கும் சுவர் விளம்பரங்கள் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது என நாசம் செய்து விடுவர். இந்த நிலையைப் போக்க சிதம்பரத்தில் அரசு சார்பில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பாலத்தின் சுவர்கள், அலுவலக சுவர்களில், பார்த்தால் யாருக்கும் அசுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராத அளவில், கலைநயத்துடன் கூடிய ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக, வரலாற்று நிகழ்வுகளை மக்களுக்கு நினைவு படுத்தம் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது.
 

         சிதம்பரம் அண்ணாமலைநகர் மேம்பால சுவர்களில், இதுபோன்ற ஓவியங்கள் சுவற்றை அலங்கரித்திருந்தன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திடீரென இரவோடு, இரவாக ஒரு அரசியல் கட்சி சார்பில், நம்மை யார் கேட்பது என்ற ரீதியில் அழகான ஓவியங்கள் மீது வரிசையாக போஸ்டர்கள் ஒட்டி அசுத்தம் செய்துள்ளனர். அரசு ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து, அழகுபடுத்தும் சுவர்களை இதுபோன்று ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும், அநாகரிக போக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior