சிதம்பரம்:
புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தமிழக காவல் நிலையங்களில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
ரோந்து செல்ல காவலர்கள் இல்லாததால் திருட்டு, வழிபறி உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளன. தற்போது காவல் நிலையங்களில் பணியாற்றிய தலைமைக்காவலர்கள் அனைவரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் காவலர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களில் காவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட பயிற்சி பெற்ற காவலர்களை காவல் நிலையங்களில் உள்ள காவலர் பணியிடங்களில் நியமனம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இதனால் ரோந்து பணிக்கு கூட காவலர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பயிற்சி பெற்று காத்திருக்கும் காவலர்களை காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என காவல்துறையினர் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக