உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 20, 2011

ஆராய்ச்சி கட்டுரைகளை இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய புதிய திட்டம்

        உலகளவில் ஆராய்ச்சி கட்டுரைகளை மின்னணு வசதி மூலம் கல்லூரிகளிலேயே மாணவர்கள் இலவசமாக பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

        முதுகலை பட்ட மேற்படிப்பு, அறிவியல் ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் ஆய்வுக்கு தேவையான ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு புத்தகங்களில் இருந்து திரட்டுகின்றனர். இதில் முக்கிய புத்தகங்கள், ஒரு சில நூலகங்களில் மட்டுமே கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஆராய்ச்சி புத்தகங்கள் கிடைக்காமல் சிலர் சிரமப்படுகின்றனர். அப்படியே கிடைத்தாலும் இந்த புத்தகத்தை பல ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கும் நிலை ஏற்படுகிறது.

       இதைத் தொடர்ந்து மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு துறை சார்பில், பல்கலைக் கழக மானிய குழு, ஐ.ஐ.டி., - ஏ.ஐ.சி.டி.இ., இணைந்து, "என். லிஸ்ட்' என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையதளத்தில், 2,500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வசதியை பல்கலைக்கழக மானியம் பெறும் கல்லூரி மாணவர்கள் பெறும் வகையில், மின்னணு தகவல்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. 

        இங்குள்ள முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக, "யூசர்நேம், பாஸ்வேர்டு' வழங்கப்படும். இணையதள வசதியை பயன்படுத்தி மாணவர்கள் இலவசமாக ஆராய்ச்சி கட்டுரைகளை பெறலாம். இத் திட்டத்தில் இந்தியா முழுவதும், 600 கல்லூரிகளை இணைக்க திட்டமிட்டு, இதுவரை, 1,500 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியிலும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior