உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 21, 2011

ராமநத்தத்தில் காவலர் குடியிருப்பு: கடலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பகலவன்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/1b9bd3bf-0954-450e-a1a4-fe0a051690f7_S_secvpf.gif

 
 திட்டக்குடி:
 
          திட்டக்குடியில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பொதுமக்களை சந்தித்து காவல்துறை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.
 
              கூட்டத்தில் ரோட்டரி சங்க தலைவர் முத்து, செயலாளர் அறவாழி இயக்குனர் வாசு, ஜேசிஸ் தலைவர் புனிதா, இயக்குனர் ஜெய்சங்கர் அரிமா சங்க தலைவர் விசுவநாதன் தொழிலதிபர் பி.டி. ராஜன், அதிமுக நிர்வாகிகள் நீதிமன்னன், மதியழகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சுப்ரமணியன், முருகையன், திமுக நிர்வாகிகள் பரமகுரு, செந்தில், அமிர்தலிங்கம், வணிகர் சங்க நிர்வாகிகள் தங்கராசு, சண்முகம், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
மனுக்களை பெற்று மாவட்ட எஸ்பி பகலவன் பேசியது:-
 
          தனி நபர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். திட்டக்குடி நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளது போக்குவரத்து அதிகரித்துள்ளது இந்த சூழ்நிலையில் விபத்துகளை தவிர்ப்பதை குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசுவேன். திட்டக்குடி,பெண்ணாடம் பகுதியில் பஸ்கள் பஸ் நிலையங் களுக்குள் செல்வது இல்லை என்பதால் பிரச்சினைகள் எழுந்துள்ளன. அனைத்து பஸ்களும் பஸ் நிலையங்களுக்குள் சென்று திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
 
             ஆட்டோ, டாட்டா ஏசி வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து முடிவு செய்யப்படும். பஸ் நிலையங்களில் தள்ளு வண்டிகளின் போக்குவரத்து குறித்து நடவடிக்கை எடுக்கப்படும், பஸ் நிறுத்தம் உட்பட பொது இடங்களை மது அருந்தும் இடமாக பயன் படுத்துவோரை அனுமதிக்க இயலாது.
 
          திட்டக்குடி உட்கோட்டத்தில் போக்குவரத்து பிரிவும் மகளிர் காவல் நிலையமும் அமைய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். தற்காலிக ஏற்பாடாக மாவட்டத்தின் மற்ற பகுதியில் இருந்து போக்குவரத்து போலீசார் கொண்டுவரப்பட்டு போக்குவரத்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் பள்ளி செல்லும் வழியில் கேலி கிண்டல்களை கட்டுப்படுத்த இரு வேளை களிலும் போலீசார் போடப்படுவர்.
 
              நண்பர்கள் குழு முழுமையாக செயல்பட பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். திட்டக்குடியில் காவல் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது 6 மாதங்களில் பணி முடியும். நல்ல நண்பர்களை ஊக்குவித்து நண்பர்கள் குழு அமைப்பதில் எங்களுக்கு தயக்கம் இல்லை. காவல்துறை என்றுமே நல்லவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நண்பர்களாகவே செயல்படுவர்.
 
            ராமநத்தத்தில் காவலர் குடியிருப்பு கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது மாவட்ட எல்லையில் கிராமங்கள் அமைந்துள்ளதால் இராமநத்தம் பகுதிகளில் மதுவிலக்கு பணி செயல் படுத்துவதில் நடவடிக்கை எடுக்கப்படும் தற்போது விருதாச்சலத்தில் இயங்கும் மது விலக்கு பிரிவில் இருந்து போலீசார் நிரந்தரமாக இராமநத்தம் பகுதியில் தங்கி மது விலக்கு பணியை மேற் கொள்ளுவர். இவ்வாறு பகலவன் பேசினார்.
 
              கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா, இன்பெக்டர் பஞ்சாட்சரம், உட்பட பலர் கலந்து கொண்டனர்
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior