உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 26, 2011

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரிக்கை

கடலூர்:

              திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 6-வது செமஸ்டர் (இளநிலை பட்டப்படிப்பு இறுதித் தேர்வு) தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், தமிழக ஆளுநர், முதல் அமைச்சர் உள்ளிட்டோருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

           கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 96 கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு, 6-வது செமஸ்டர் தேர்வு முடிவுகளை இன்னமும், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிடவில்லை. ஏப்ரல் 1-ம் தேதியே பட்டப்படிப்புக்கான 3-ம் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் முடிந்து விட்டன. ஆனால் தேர்வு முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை.

                இதனால் அண்மையில் நடைபெற்ற அம்பேத்கர் சட்டக் கல்லூரி கவுன்சலிங் உள்ளிட்ட பல்வேறு உயர் படிப்புகளுக்கு, இந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தால்கூட, மாணவர்கள் அதைப் பயன்படுத்தி, உயர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை உடனே வெளியிட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் அலட்சியம் காட்டும் இப்பல்கலைக்கழகம் மீது நடடிக்கை எடுக்க வேண்டும்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior