உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஜூலை 26, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம்

         அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பல்கலைக் கழகத்தின் அரியலூர் படிப்பு மைய உதவிப் பேராசிரியரும், தொடர்பு அலுவலருமான எல்.கே. வேலாயுதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

             அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் நிகழ் கல்வியாண்டில் இளநிலைப் பிரிவிலும், முதுநிலைப் பிரிவிலும் பல்வேறு புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இளநிலைப் படிப்பில் வேதியியல், மைக்ரோபயாலஜி, அனிமேஷன், விஷூவல் தொழில்நுட்ப சினிமா தயாரிப்பு ஆகிய பாடப் பிரிவுகளும், முதுநிலைப் படிப்பில் என்.ஜி.ஓ. மேலாண்மை, விரிவாக்க மேலாண்மை, மைக்ரோ பயாலஜி, முதுநிலைப் பட்டயப்படிப்பில் பங்குச் சந்தை வணிகம், அனலிடிகல் டாக்ஸிகாலஜி, சான்றிதழ் பாடப் பிரிவில் மிருதங்கம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

              நிகழ் கல்வியாண்டு முதல் எம்.பி.ஏ. படிப்பில் ஹெல்த் மேனேஜ்மென்ட், ஆபரேஷன்ஸ் மேனேஜமென்ட், ப்ரொஜக்ட் மேனேஜ்மென்ட், எனர்ஜி மேனேஜ்மென்ட் ஆகிய பாடப் பிரிவுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பாடங்கள் அனைத்தும் ஆன்லைனில் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இதன் மூலம் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டிலிருந்தே எம்.பி.ஏ. படிக்கலாம். தொலைநிலைக் கல்வி முறையில் சேர்க்கை பெறும் எஸ்.சி, எஸ்.டி. மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.  இந்த உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

                  நிகழ் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவோர், ஏற்கெனவே சேர்க்கை பெற்றவர்கள், பயின்றவர்கள், குறிப்பிட்ட சில பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை 50 சத கட்டணச் சலுகையில் படிக்கலாம். மேலும், படிப்புக் கட்டணம் நீங்கலாக மற்றக் கட்டணங்களைச் செலுத்தி மாற்றுத் திறனாளிகள் சேர்க்கை பெறலாம் என்றார் அவர்.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior