உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 16, 2011

எழும்பூரில் அண்ணாமலை பல்கலைக்கழக கல்வி-வேலைவாய்ப்பு கண்காட்சி

கல்வியியல் கண்காட்சியை திறந்து வைத்து அங்குள்ள அரங்குகளைப் பார்வையிடுகிறார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ராமநாதன் (இடது).
            அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் 3 தின கல்வி-வேலைவாய்ப்பு கண்காட்சி சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

          எழும்பூரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கல்வி மையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ராமநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 

இது குறித்துஅண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ராமநாதன்  கூறியது: 

            தொலைதூரக் கல்வி மூலம் பல புதுமையான எளிதான வேலைவாய்ப்பு சார்ந்த பல சிறப்பான பாடத் திட்டங்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. தொலைத்தொடர்பு கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவே இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.இந்தக் கண்காட்சியில் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொடர்புத்துறை பாதுகாப்பு, டிஜிட்டல் பதிப்பீடு, கணினி வரைபடக் கல்வி, தொலைக்காட்சி செய்திவாசிப்பு, வானொலி நிகழ்ச்சி தொகுப்பு, ஆடை வடிவமைப்பு, ஹோட்டல் நிர்வாகம், பாராமெடிக்கல், விஷுவல் மீடியா, பரதநாட்டியம் மற்றும் யோகா தொடர்பான பயிற்சிப் படிப்புகள் இடம்பெற்றுள்ளன என்றார் அவர். 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் கூறியது: 

            அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மூலம் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் படிக்கின்றனர். ஊடகங்கள் தொடர்பான படிப்புகளில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இது போன்று மேலும் பல பாடத்திட்டங்கள் வரும் ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என பி.நாகேஸ்வரராவ் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஹெச்.எம்.ஹெச். கல்வி நிறுவன மேலாண்மை இயக்குநர் ஹெச்.எம்.கஸ்ஸாலி, அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி சென்னை மையத்தின் நிர்வாக அதிகாரி ராஜகோபால் ஆகியோர் பங்கேற்றனர். 





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior