உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக்கல்வியில் உளவியல் சிகிச்சை படிப்பு

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் உளவியல் சிகிச்சை தொடர்பான படிப்பிற்காக சென்னை மெடால் ஹெல்த் கேர் நிறுவனத்துடன் துணைவேந்தர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி வாயிலாக எம்.எஸ்சி., ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சை என்ற முதுநிலை பட்டப் படிப்பையும், திருமணம் மற்றும் குடும்ப நல ஆலோசனை, தொழில் மற்றும் வழிகாட்டல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள், சுற்றுப்புற சூழல் உளவியல், விளையாட்டுத் துறை உளவியல் உட்பட ஆறு பட்டயப் படிப்பும் வழங்க உள்ளது. அதற்காக சென்னை மெடால் ஹெல்த் கேர் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
            துணைவேந்தர் ராமநாதன் முன்னிலையில் நடந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் பதிவாளர் ரத்தினசபாபதி, தொலைதூரக் கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம், சென்னை மெடால் ஹெல்த் நிறுவன துணைத் தலைவர் ராஜாராய் சவுத்ரி, ஆலோசகர் மீனா ஐயர் ஆகியோர் பங்கேற்றனர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior