உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்முடி கடலூர் மத்திய சிறைக்கு வந்தடைந்தார்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/63f10be4-337a-4e6b-a98d-342ab77721b9_S_secvpf.gif

கடலூர்
             நில அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் பொன்முடியை திண்டிவனத்தில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் புதுச்சேரி வழியாக கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். ஆனால் கடலூர்- ராமாபுரம் செல்லும் சாலையில் உள்ள மத்திய சிறையின் நுழைவு பகுதியில் ஏற்கனவே அங்கே பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் வேனை குறுக்கே நிறுத்தி பொன்முடியை வழி மறித்தனர்.

                 இதனால் பொன்முடியை அழைத்து வந்த போலீசாரும் வேனை நுழைவு பகுதியிலேயே நிறுத்தினர். நிர்வாக காரணங்களை கூறி, கடலூர் மத்திய சிறையில் உங்களை அடைக்க முடியாது என்று பொன்முடியிடம் போலீசார் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அவர் வேனை விட்டு கீழே இறங்கி வந்து நான் இங்குதான் இருப்பேன் என்று போலீசாரிடம் கூறிவிட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார். பின்னர் பொன்முடி  பேட்டி அளித்தார். 
 அப்போது பொன்முடிகூறியது:-  

                 என்னை மதியம் 1.45 மணிக்கு கைது செய்து திண்டிவனம் கோர்ட்டுக்கு அழைத்து சென்றார்கள். அப்போது நீதிபதியிடம் நான் இருதய நோயாளியாக இருப்பதால் மருத்துவ காரணங்களை கூறி, என்னை கடலூர் சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கான மருத்துவ சான்றிதழ்களையும் காண்பித்தேன்.  இதையெல்லாம் பார்த்துவிட்டு வாரண்டில் உள்ள சேலம் மத்திய சிறை என்பதை பேனாவால் அடித்து விட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இங்கே வந்த பின்னர் நிர்வாக காரணங்களை கூறி என்னை கடலூர் சிறையில் அடைக்க இயலாது என்று போலீசார் கூறுகின்றனர்.   எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு போலீசார் தான் காரணம்.

             இங்கு இருந்தபடியே என்னை டாக்டரிடம் அழைத்துச்செல்லுங்கள். நான் இங்கேயே இருந்து சாவேனே தவிர சேலம் மத்திய சிறைக்குபோக மாட்டேன். எனக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.   இதைத் தொடர்ந்து பொன்முடி நுழைவுபகுதியில் இருந்து தொண்டர்கள் புடை சூழ மத்திய சிறைநோக்கி நடந்து வந்தார். அப்போது பொன்முடி மற்றும் அவரது உறவினர்கள், வக்கீல்கள் ஆகியோரை மட்டும் சிறையின் முன்புள்ள மெயின் கேட்டுக்குள் அனுமதித்தனர்.

                சிறையின் மெயின் கதவு அருகில் உள்ள திண்ணையில் பொன்முடி மட்டும் அமர்ந்து இருந்தார். சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் பொன்முடியை சிறையில் அடைப்பதற்கு அதிகாரிகள் அனுமதித்து அவரை உள்ளே அழைத்து சென்றனர்.   

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior