சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், "நாசா'-வுக்கு கல்விச் சுற்றுலா திட்டத்தின் கீழ் அமெரிக்கா செல்ல உள்ள மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர்
நாசா'-வுக்கு கல்விச் சுற்றுலா திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்னிந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் ஜெனீஃபர் மெக்கின்டயர், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். இந்த கல்விச் சுற்றுலாவுக்கு சென்னையைச் சேர்ந்த உலக பயணக் குழு (டபிள்யு.டி.சி.) ஏற்பாடு செய்து வருகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் இந்தச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த சுற்றுலா செல்ல விரும்பும் மாணவர்கள் ரூ. 1.50 லட்சம் செலுத்த வேண்டும். இந்த மாணவர்கள் கென்னடி விண்வெளி மையத்தில் 4 நாள்கள் தங்க வைக்கப்படுவதோடு, யுனிவர்சல் ஸ்டூடியோ, மேஜிக் கிங்டம், வெள்ளை மாளிகை, அமெரிக்க நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்படுவர். விண்வெளி ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடவும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். சுற்றுலா முடிந்து அவர்கள் 11-ம் நாள் இந்தியா திரும்புகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக