உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, செப்டம்பர் 10, 2011

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் போட்டி: ஸ்ரீதர் வாண்டையார்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/36781263-1666-4504-a292-0b8da05ada56_S_secvpf.gif
 
கடலூர்:

             நில அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 10.30 மணிக்கு மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கடலூர் ஜெயிலில் நேரு, பொன்முடி, அன்பில் பெரியசாமி ஆகிய 3 பேரையும் சந்தித்து பேசினார்.

பின்னர் ஜெயிலை விட்டு வெளியே வந்த ஸ்ரீதர் வாண்டையார் பேட்டி அளித்தார். 
 
        உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் இடம் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.   தி.மு.க. மீது பொய் வழக்கு போடுவதை அரசு நிறுத்த வேண்டும். நலத்திட்டங்கள் வழங்குவதில் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மூவேந்தர் முன்னேற்ற கழக ஆட்சி மன்ற குழு செயலாளர் செல்வராஜ், மாநில துணை தலைவர் விப்ரா நாராயணன், கடலூர் பொறுப்பாளர்கள் மணிவண்ணன், அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior