உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 15, 2011

சிதம்பரம் வட்டத்தில் வாழைக்கு இன்சூரன்ஸ் திட்டம்


சிதம்பரம் : 
 
            வாழைப் பயிருக்கு இன்ஸ்சூரன்ஸ் திட்டம் உள்ளதால் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு, பரங்கிப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் பா.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது குறித்து பரங்கிப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் பா.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 
 
                 வாழைப் பயிர் அதிக வருமானம் தரும் தோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றாகும்.விவசாயிகள் செலவு செய்து சிறந்த முறையில் பயிரிடப்படும் வாழைப் பயிரானது வருமானம் தரும் நேரத்தில் திடீரென ஏற்படும் இயற்கைச் சீற்றங்களான புயல், வெள்ளம் ஆகியவற்றால் மிக எளிதில் பாதிக்கப்பட்டு பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது.
 
               இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள வாழைப் பயிரை இத்தருணத்தில் காப்பீடு செய்து புயல், வெள்ளத்தால் ஏற்படும் சேதத்துக்கு நஷ்டஈடு பெறலாம்.வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகள், கடன் பெறாத விவசாயிகள் ஆகிய இருசாராரும் வாழைப் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தாங்கள் பெறும் கடன் தொகையில் 7.40 சதவீதத்தை பிரீமயமாக செலுத்த வேண்டும். இதில் 50 சதவீதம் (3.70) அரசு மானியம் போக மீதி 50 சதவீதம் பிரீமியம் செலுத்தினால் போதும்.கடன் தொகைக்கும் கூடுதலான தொகைக்கு பிரீமியம் செலுத்த விரும்பினாலும் செலுத்தலாம்.
 
              சிதம்பரம் வட்டத்தில் உள்ள வாழை விவசாயிகள் பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், புதுச்சத்திரம், பூவாலை, சாத்தப்பாடி, கீழமணக்குடி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களிலும், பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கி மற்றும் பு.முட்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளிலும் பிரீமியத் தொகையை செலுத்தலாம் என பா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior